பருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா?
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.குறித்த பாரிய துறைமுக அமைப்புபணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் வடமாகாணசபையும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுப்புறச்சூழல் அறிக்கையினை காரணங்காட்டி துறைமுக அமைப்பு வேலைக்கான அனுமதியை வழங்காது வடமாகாணசபை இதுவரை காலமும் இழுத்தடிப்புக்களை செய்திருந்தது.எனினும் தற்போது அது அவ்வாறு சுற்றுச்சுழல் பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து முன்னெடுக்க கூடிய மாற்று வழிவகைகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தே அனுமதியை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஒருசிறு பகுதியினை பருத்தித்துறை முனைப்பகுதியின் அபிவிருத்திக்கு வழங்குவதான அரசு அறிவித்துள்ளது.
எனினும் ஹாட்லிக்கல்லூரிக்கோ அருகாக அமைந்துள்ள மெதஸ்டித மிசன் உயர்தரக்கல்லூரிக்கோ எந்த இழப்பீடோ மாற்று நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென தெரியவருகின்றது.
இதனிடையே ஹாட்லிக்கல்லூரி அதிபர் முறைப்பாடுகளை பதிவு செய்தால் மட்டுமே பரிசீலிக்கமுடியுமென வடமாகாணசபை தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.
நாடு தோறும் தங்கள் பெருமைகளை பீற்றிக்கொள்ள ஆண்டாண்டு விழா கொண்டாடும் இப்பாடசாலைகளது பழைய மாணவர்களும் கல்வி சமூகமும் புகழ்பூத்த பாடசாலைகளை மூடிவிடும் நெருக்கடி தொடர்பில் மௌனம் காப்பது அனைத்து தரப்பினரிடையேயும் கேள்வியை தோற்றுவித்துள்ளது.
Post a Comment