யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி?


யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை.

முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனிதபுதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதும் கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments