வடக்கில் 5,442 வெடிபொருட்கள் அழிப்பு! ஸார்ப் அறிவிப்பு!

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஜூன் மாதம் வரையான காலப் பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் 5,442 அபாயகரமான வெடிபொருட்களை அழித்துள்ளதாக ஸார்ப் நிறுவன முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஜூன் வரையான காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் 5 இலட்சத்து 32 ஆயிரத்து 391 சதுரமீற்றர் பரப்பளவிலான காணிகளிலிருந்து 5,442 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழித்துள்ளதாக அந் நிறுவனத்தின் முகாமையாளர் பிரபாத் நாரம்பனவ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments