ஐ.நா பக்க அமர்வில் குழப்பம் விளைவித்த இலங்கை படை அதிகாரிகள்! - தமிழ்ப் பெண் மயக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வின் போது, இலங்கையின் முன்னாள் படை அதிகாரிகள் குழப்பம் விளைவித்துள்ளனர். இதன்போது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐந்து பேர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாத, இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று கலந்து கொண்டு- கேள்வி நேரத்துக்கு முன்னரே கேள்விகளை எழுப்பி குழப்பம் விளைவித்தனர்.

இதனால் மனஉளச்சலடைந்த தமிழ் பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் ஜெனிவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, பக்க அறையில் இருந்து குழப்பம் விளைவித்த இலங்கை படை அதிகாரிகளை வெளியேற்ற ஐ.நா பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோழர் திருமுருகன் காந்தி, “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், தமிழீழத்தில் இலங்கை அரசால் கடத்தப் பட்டோர் பற்றி வாக்குமூலம் அளிக்க வந்த அப்பாவி தமிழர்களை இலங்கை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

இதன் மூலம் இலங்கை அரசின் அராஜகம் உச்சகட்டத்தை அடைகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments