நெதர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட போட்டி

17-06-18 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஆண்டுக்கான மாவீரர் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட போட்டிகள் S-Hertogenbosch என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது . அத்துடன் நெதர்லாந்து கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது .பின் அதனைத்தொடர்ந்து முதல் மாவீரன் லெப்டினன்ட்சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து விளையாட்டுவீரர்கள் மக்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்திய பின்  போட்டிகள் யாவும் ஆரம்பம் ஆனது.

போட்டிகளின் இறுதியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான கிண்ணங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கேடயங்கள் வழங்கப்பட்டு இறுதியில் தமிழீழ தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு உதைப்பந்தாட்ட நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.
வெற்றிபெற்ற கழகங்களின் விபரங்கள் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3ம் இடம் Amsterdam,2ம் இடம் Yongstaar,1ம் இடம் Denhelder.17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3ம் இடம் Breda ,2ம் இடம் Denhelder,1ம் இடம் Amsterdam.பெரியோர் பிரிவில் 3ம் இடம் Denhelder, 2ம் இடம் Breda A, 1ம் இடம் YMTA B.

















No comments