முதலமைச்சர் யார்?தமிழரசுக்குள் குழப்பம்!

வடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைமை என்பவை இன்று முல்லைதீவில் தரித்திருந்த போதும் சந்திப்புக்கள் எவற்றிலும் பங்கெடுத்ததாக தகவல்கள் இல்லை.

தமிழரசுக்கட்சி தலைவர்கள் தமது மத்திய குழு கூட்டத்திற்காக முல்லைதீவில் நிலைகொண்டுள்ள நிலையில் மறுபுறம் முதலமைச்சர் பொதுநிகழ்வொன்றிற்காக முல்லைதீவு சென்றுள்ளார்.எனினும் அவர்களிடையே சந்திப்புக்கள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை.

தமிழ்  தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்து பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டுமென தமிழரசின் வெளிநாட்டு கிளைகள் வலியுறுத்திவருகின்றன.

தமிழ் மக்கள் பலவீனமுற்ற நிலையில் ஒற்றுமை இன்மையால் பல பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வடமாகாண சபை தேர்தல் முதல்வர் தெரிவு போட்டியை வளர்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பல தீயசக்திகள் த.தே.கூட்டமைப்பையும் தமிழ் அரசுக் கட்சியையும் பிளவு படுத்துவதற்கு சூழ்;ச்சிகளை மேற்கொள்வதை அனைவரும் அறிவார்கள்.
கடந்த வடமாணகான சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராகக் கொண்டுவந்தவர் சம்பந்தன் என்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே சம்பந்தன்,விக்னேஸ்வரன் இருவரும் உடன் சந்தித்து பேசவேண்டுமென்பதே புலம்பெயர் தமிழரசுக்கட்சி கிளைகளது நிலைப்பாடாக உள்ளது.

உண்மையில் முதலமைச்சர் தனித்து தமிழரசை புறந்தள்ளி தேர்தலில் குதித்தால் பெரும் பின்னடைவை அடையவேண்டுமென அஞ்சுவதாலேயே இத்தகைய அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது.
இதனிடையே இன்று முல்லைதீவில் தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் முக்கிய பேசுபொருளாகியிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments