கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன?

தென்மராட்சியின் கச்சாய் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான பொய்ச்செய்தியை ஜக்கிய தேசியக்கட்சி உள்ளுர் பிரமுகரும் அமைச்சர் விஜயகலாவின் எடுபிடியுமான சர்வா என்பவரே பரப்பியதாக கண்டறியப்பட்டுள்ளது.தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவி குறித்த சர்வாவின் மகளேயென மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் சில பத்திரிகைகளில் தென்மராட்சியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர்,மாணவி ஒருவரை கம்பியால் தாக்கி மாணவி வைத்தியசாலையில் அனுமதி என்கின்ற செய்தியை வெளியிட்டிருந்தன.

பாடசாலை மாணவர்களை தண்டிக்கக்கூடாது என்பது மாணவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகம் என ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் சிறுவர்களை பாதுகாப்பதற்கான பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுனிசெவ் கல்விக்கானபெரும் நிதிப்பங்களிப்பை நல்குவதால் அவற்றினுடைய கட்டுப்பாடுகளிற்கு உடன்பட்டே உதவிபெறுவது புதிய கதையல்ல.

இதன் ஒருபுறமாக மேல் நீதிமன்ற நீதிபதி அதிபர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டு அவற்றிற்கு சட்டவிளக்கம் வழங்கியதோடு ஆசிரியர்கள் கைகள் முற்று முழுதாக கட்டப்பட்டது.சட்டமும் சமூகமும் இவர்களிற்கு பாதுகாப்பில்லை என்ற எண்ணப்பாடு ஆசிரிய சமூகத்திடம் எழுந்துமிருந்தது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர் ஏசியதால் தமக்கு உளவியல் பாதிப்பு ஏற்பட்டதாக முறையிடும் அளவிற்கு நிலைமை சீர்கெட்டது. அனைத்து ஆசிரியர்களும் சமூகப் பொறுப்பு என்பதை கைவிடும் நிலையில் பாரிய மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஆசிரியர்,மாணவர் என்கின்ற ஈர்ப்பு உடைந்துபோனதாக அவதானிகள் கூறுகின்றனர். ஆசிரியரின் கண்டிப்பும் புத்திமதியுமே சமூகத்தை நல்வழிப்படுத்தும் என்றநிலை தலைகீழானது.

இதன் தொடர்ச்சியே கச்சாய் சம்பவமாகும். மாணவி தனது கல்வியில் பின் சென்ற போது அதிபரினால் பெற்றோர் அழைக்ப்பட்டிருந்தார். ஆனால் பெற்றார் அங்கு சமூகமளிக்கவில்லை. இது பெற்றாரின் பொறுப்புணர்வைக் வெளிக்காட்டி நின்றது. இதனால் மாணவியை அதிபர் ஏசியதுடன்; வெருட்டியுள்ளார். குறித்த மாணவி பாடசாலை முடிவுற்றதும் இன்னொருவருடையது விச்சக்கரவண்டியில் சென்ற போது விபத்து ஏற்பட்டு விழுந்ததனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் தந்தையான சர்வா ஊடகங்களிற்கு திரிபுபடுத்தி செய்தியை வழங்கியுள்ளார். அவரை மேற்படி பாடசாலை பிரதம விருந்தினராக்கி மேடை வழங்கவில்லையெனவும் அதனால் அதிபரை வழிக்குக்கொண்டு வரும் எண்ணத்தில் தனது பெற்ற மகளின் வாழ்க்கையென்றும் பாராது பரப்புரையை நடத்தியுள்ளார்.

குறித்த பிரபல பாடசாலை பல வருடவரலாற்றைக் கொண்டது. சென்ற வருடக.பொ.தஉயர்தரத்தில் 13 மாணவர்களை க.பொ.தஉயர்தரம் கற்க உருவாக்கியது மட்டுமல்ல 5ம் தரபுலமைப் பரீட்சையிலும் முன்னணி வகிக்கும் பாடசாலையாக உருவாக்கிய தன்னை உருக்கிசமூகத்திற்காக உழைக்கும் ஒரு தராதரமிக்க  ஒருவரை அதிபராகக் கொண்டதாகும். ஏழு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட, பல்சமூகமக்களிற்குரிய 450 மாணவர்களைக் கொண்டதொரு அழகிய பாடசாலையாகும்.

குறித்த பொய்ச்செய்தியானது அதிபர் மற்றும் சார்ந்த சமூகம் என்பவற்றை உளப்பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்பது பற்றியோ எதிர்காலத்தில் இம்மாணவர்களை யார் வழிநடத்துவதுஎன்பது பற்றியோ இங்கு யாருக்கும் அக்கறை இல்லையாவென கல்வி சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments