மாவட்டச் செயலகத்தை முடக்க பட்டதாரிகள் தீர்மானம் - அரசியல்வாதிகள் மீது காட்டம்



யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாணசபையின் முடக்கி தொடர்போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள வடக்கு மாகாண பட்டதாரிகள் தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (20) காலை தத்தமது மாவட்டச் செயலகங்களுக்கு முன்னால் ஒன்று கூடி அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ருந்தனர். இதன்போது தொடர் போராட்டத்துக்குத் தாயாராவதாக தகவல்கள் வெளியிடப்பட்டள்ளன.

இதற்கென நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22)  யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக பட்டதாரிகளை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பட்டதாரிகள் விடயத்தில் அக்கறையற்றவர்களாக இருப்பதாகவும் தாம் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும்போது மதிய வேளைகளில் செய்திகளில் தங்கள் பெயர்கள் அடிபடவேண்டும் என்பதற்காக தங்களோடு போராட்டப் பந்தலில் அமர்ந்திருந்திருப்பதிலும் தாங்கள் சமைத்து உண்ட உணவை வாங்கி உண்டு புகைப்படங்களிற்கு போஸ் கொடுப்பதிலும் காட்டிய அக்கறையை தமக்கான நியாயபூர்வமான நியமனம் வழங்கும் நடவடிக்கைகளில் காட்டவில்லை என்றும் தெரிவித்தனர்.



கடந்த ஏப்பிரல் மாதம் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கு இன்னமும் புள்ளிகள் அறிவிக்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அடுத்த கட்ட  நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் 5 ஆயிரம் பட்டதாரிகள் அரசியல் அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளனர் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர்கள் அரசாங்கம் புள்ளி அடிப்படையில் இல்லாமல் பட்டம்பெற்ற வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியே மாவட்டச் செயலகம் மற்றும் மாகாணசபையை முடக்கி தொடர் போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

No comments