வீட்டிற்கு போக தயாராகும் டக்ளஸ்?

வடக்கு மாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப் பலத்தை தராதுவிடின் தான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறுவழியில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே உதயன் பத்திரிகைக்கு எதிராக நான் தொடுத்திருந்த மானநஸ்ட வழக்கில் நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உதயன் பத்திரிகை நிறுவனத்தக்கு எதிராக 500 மில்லியன் ரூபா கோரி மானநஸ்ட வழக்கு தொடுத்திருந்த நிலையில் நீதிமன்றம் 2 மில்லியன் ரூபாவை மானநஸ்ட நிதியாக எனக்கு வழங்குமாறு உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பணத்தை பெற்றுக் கொள்வது எனது நோக்கம் இல்லாதுவிடினும் நான் இவ்வழக்கில் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து சுற்றவாழிதான் என்றும் நாம் மக்களிடம் கூறிவருவதே உண்மையான நிலைப்பாடு என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

நாம் ஒருபோதும் போலித்தனமான பொய்த்தனமான அரசியலை முன்னெடுத்தவர்களும் இல்லை முன்னெடுப்பவர்களும் இல்லை. கடந்தகாலங்களில் என் மீதும் எனது கட்சி மீதும் சக தமிழ் கட்சிகளும் தமிழ் ஊடகங்களும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்திவந்தன.
இது ஒருவகையில் அரசியல் காழ்ப்பணர்ச்சியாகவே இருந்துள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

No comments