மனோகணேசன் அடிமை மனநிலையில் பேசுகின்றார்: கே.சிவாஜி


நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றைய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் தேவையில்லையென 2010ம் ஆண்டிலேயே தற்போதைய அமைச்சரான மனோகணேசன் கருத்துக்களை முன்வைத்திருந்தமை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியிருந்தது.

தான் இருக்கக்கூடிய சிங்கள பேரினவாத சிங்கள அரசை காப்பாற்ற எமது மக்களது வாக்கினில் தெரிவாகிய மனோகணேசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் வேதனையை தருவதாகவும்; வெட்கத்தை தருவதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்மை விசாரிக்கும் அளவிற்கு வெள்ளைக்காரர்கள் தூயவர்கள் அல்லவென அரச அமைச்சர் மனோ கணேசன் கருத்தொன்றை வெளியிட்டமையை சிவாஜிலிங்கம் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.

அது தொடர்பிலான பொறிமுறையை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ள நிலையில் இந்த சிங்கள அரசின் மூலம் தமிழ் மக்களிற்கு நல்லதொரு தீர்வை பெற்றுத்தரமுடியுமாவெனவும் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச பிரகடனங்கள் பற்றியோ அதில் ஒப்பமிட்ட அல்லது ஒப்பமிட மறுக்கின்ற இலங்கை அரசு பற்றியோ பேசத்தயாராக இல்லாத மனோகணேசன் தனது அடிமை விசுவாச மனோநிலையில் இத்தகைய கருத்துக்களினை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments