யாழில் மூன்று மீனவர்கள் மாயம் : இன்றும் பல பகுதிகளில் மழை


நிலவும் மழையுடனான காலநிலை படிப்படையாக குறையும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் இன்றைய தினம் மேல், தென், சப்பரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடுடும் என்பதோடு, கடல் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை,  குறிகட்டுவான் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த மூவரே காணாமல் போயுள்ளனர்.

சனிக்கிழமை மதியம் குறிகட்டுவான் கடலுக்கு அவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் காலை எட்டு மணியளவில் தனது மனைவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர்களில் ஒருவர், தாங்கள் நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாக தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் காவல்துறையும் கடற்படையும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments