சிரியக் கடலில் ரஷ்ய போர் விமானம் விழுந்து நொருங்கியது!

சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ரஷிய விமான தளத்தில் இருந்து ஒரு ராணுவ விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. சிரியா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

முதலில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை ரஷியா மறுத்துள்ளது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பறவைகள் ஏதும் என்ஜினில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த இரு விமானிகளும் இறுதிவரை விமானத்தை சரிசெய்ய முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியாததால் ரஷியா ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விமானம், மக்கள் வசிக்கும் பகுதியில் விழாமல் கடலில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

No comments