யாழ். மாநகர முதல்வர் மீதான முறைப்பாட்டை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை! - மணிவண்ணன் விசனம்


யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் சுட்டிக்காட்டிய போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் அவர் எடுக்கவில்லை என்று மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன் விசனம் வெளியிட்டுள்ளார். “ யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டங்களை மீறி அல்லது மதிக்காமல் செயற்பட்டு வருகின் றார். இந்த விடயம் தொடர்பாக சபையிலும், தனிப்பட்ட முறையிலும் உறுப்பினர்கள் முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் முதல்வரின் செயற்பாட்டில் மாற்றங்கள் உண்டாகவில்லை. இதனையடுத்து வடமாகாண முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக் னேஸ்வரனிடம் யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் முறை ப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றோம். எங்களுடைய முறைப்பாடு தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கை தன்னும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் வடமாகாணத்தில் இல்லை என அறிகிறோம். முதலமைச்சர் இல்லை என்றாலும் எமது முறைப்பாடு தனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. அது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூட இதுவரை எமக் கு எந்தவிதமான அறிவித்தல்களும் வரவில்லை. ஆகவே யாழ்.மாநகர முதல்வரின் செயற்பாடு கள் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கபோகும் நிலையில் வடமாகாண முதல்வர் உள்ளுராட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதனை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறாரா? என எங்களுக்கு ள் கேள்வி எழுகின்றது. இந்த விடயத்தில் முதலமைச்சர் இனிமேலாவது தாமதம் கா ட்டாமல் எமது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யாழ்.மாநகர மக்களு டைய நலன் கருதி யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளை சீர்ப்படுத்த வேண்டும். என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments