சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை


சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருகோணமலை- சிறிமாபுர  சந்தியில் நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தனது வீட்டின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அமர்ந்திருந்த தெல் குமார என அழைக்கப்படும், ஹெந்தவிதாரண செலின் குமார என்ற இந்த வணிகரை, கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்ட தெல் குமார, 2005 ஒக்ரோபர் 20ஆம் நாள் கொழும்பு கிரிபத்கொடவில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான துவான் றிஸ்லி மீடின், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.
மேற்படி கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட, ஐஸ் மஞ்சுவுடன் தெல்குமார மிக நெருக்கமானவர்.
ஐஸ் மஞ்சு, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொழும்புக்கு கடத்திச் செல்வதற்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐஸ் மஞ்சு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் அவரது நண்பரான தெல் குமார நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

No comments