சத்தமின்றி வந்துப்போன இந்திய தலைமை அதிகாரி!


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த, இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவட் வடக்கிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டதாக தெரியவருகின்றது.

முன்னதாக அவர் பத்தரமுல்லையிலுள்ள இந்திய சமாதான நினைவுச்சின்னத்திற்கு இராணுவ மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்று இந்திய அதிகாரி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழு வருகைதந்துள்ளது.

இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் அழைப்புக்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்;பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்கள் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இவர்கள் தியத்தலாவயிலுள்ள இலங்கை இராணுவ கற்கை நெறிப்பீடத்தை பார்வையிடவுள்ளதுடன், திருகோணமலை மற்றும் காலி பிரதேசத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டு அவர் வடக்கிற்கு விஜயம் செய்து திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments