இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு


இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட, சிறிலங்கா தொடர்பான 195 ஆவணங்களை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போர் தீவிரமடைந்திருந்த 1978- 1980 காலகட்டத்தில், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் உருவாக்கப்பட்டிருந்த ஆவணங்களே அழிக்கப்பட்டுள்ளன. குறித்த காலகட்டத்துக்குரிய, சிறிலங்கா தொடர்பான 195 ஆவணங்கள் அழிக்கப்பட்டதை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அழிக்கப்பட்ட ஆவணங்களில் இரண்டு, 1978- 1980 காலகட்டத்தில் இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பானவை என்று,ஊடகவியலாளரும், ஆய்வாளருமான பில் மில்லர் தெரிவித்துள்ளார்.

No comments