பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த (20-05-2018) ஞாயிற்றுக்கிழமை  பாரிஸ் வன்சன் பகுதியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாவீரர் மேஜர் காந்தரூபனின் திருவுருவப்படத்துக்கு மாவீரர் கேணல் செல்வா அவர்களின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் வீரர்களை வாழ்த்தி வரவேற்று போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.  அவர்தனது உரையில், காந்தரூபனின் வீரதீரத்தையும் காந்தரூபன் அறிவுச்சோலையின் உருவாக்கம் பற்றியும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதனைத்தொடர்ந்து அனைத்துப் போட்டிகளும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. வெற்றிபெற்ற வீரர்களுக்கும் அணிகளுக்குமான வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் போட்டிகள் யாவும் நிறைவுபெற்றன.
போட்டி முடிவுகள்
15 வயதின் கீழ் உதைபந்தாட்டம்
முதலாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்
இரண்டாம் இடம்: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
மூன்றாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரன்
விபிசன் (நல்லூர்ஸ்தான் வி.க.)
பிரவின் (யாழ்ட்டன் வி.க.)
இறுதியாட்ட நாயகன்
றக்சன் (யாழ்ட்டன் வி.க.)
மேற்பிரிவு உதைபந்தாட்டம்
முதலாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்
இரண்டாம் இடம்: அக்கினி; விளையாட்டுக்கழகம்
மூன்றாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரன்
தயாபரன் பிரதீப் (அக்கினி வி.க.)
மேகமகன் (யாழ்ட்டன் வி.க.)
இறுதியாட்ட நாயகன்
கவிராஜ் (யாழ்ட்டன் வி.க.)
துடுப்பெடுத்தாட்டம்
முதலாம் இடம்: அரியாலை விளையாட்டுக்கழகம்
இரண்டாம் இடம்: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்
மூன்றாம் இடம்: ஸ்கந்தா விளையாட்டுக்கழகம்

No comments