ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அரச நிறுவனமாக்கும் சட்ட மூலம் விரைவில்


கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு பாரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தனியார் நிறுவனம் போன்றே கருதப்படுகின்றது. அதில் விளையாடும் வீரர்கள் அரச உத்தியோகத்தர்களாக கருதப்படுவதும் இல்லை. இதனால், கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் பண முறைகேடுகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை செய்ய முடியாதுள்ளது. இதனாலேயே, இந்த திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

No comments