இராமேஸ்வர கடற்கரையில் மே 18 -இல் 3000பேர் ஒன்று கூடல்!


தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் 18.5.2018 அன்று இராமேசுவரம் கடற்கரையில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

மிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களும், சிறுவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

இராமேசுவரம் கடலில் தெர்மகோல் படகு செய்து அதில் பாலச்சந்திரன் படம் பொறித்து..அதில் மெழுகுவர்த்தி சுடர் வைத்து கடலில் இறங்கி மு. களஞ்சியம் மிதக்கவிட்டார்.
அதேபோல் நூற்றுக்கணக்கான சிறுவர்கள்.. முள்ளிவாய்க்கால் மண் திசை நோக்கி இக்கரை இராமேசுவரத்திலிருந்து...அக்கரை முள்ளிவாய்க்கால் நோக்கி சிடர் ஏந்தி உயர்த்தி காட்டி வீர முழக்க மிட்டனர்...அம்முழக்கம்.. தமிழீழம் ஒன்றே தீர்வு.

பொதுமக்களும், இன உணர்வாளர்களும் கடலில் இறங்கி பூக்களைத்தூவி ஈகியர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில்..மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மு. களஞ்சியம் வீர உரையாற்றினார்

மருதுமக்கள் இயக்கம் தோழர் முத்துப்பாண்டி, மூவேந்தர் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவர், எழுத்தாளர் அன்வர்பாலசிங்கம், தமிழ்த்தேசம் மக்கள் கட்சி அமைப்புச்செயலாளர் செந்தமிழ் குமரன், தமிழர் நலம் பேரியக்கம் நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன், நெடுவை பழ திருமுருகன், தோழர் தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.. 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு பெரும் எழுச்சியுற நடந்தேறியது..அனைவரும்.. தமிழீழமே தீர்வு என உறுதி ஏற்றனர்.





No comments