தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம்: 12 பேரின் உடல்களை வாங்க மறுப்பு


ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இன்று கூடி முடிவெடுக்கப்படும் என்று போராட்டக்குழு அறிவித்திருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று தான் வருகிறது. கடந்த 100 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று அமையாக பேரணி நடத்தியபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுவரை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் இன்று இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காவல்துறைக்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அனுமதி வழங்கியது யார்? துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் காவல்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முழங்காலுக்கு கீழ் அவர்கள் சுட்டிருக்க வேண்டும். அவர்கள் கொலை குற்றவாளிகளோ அல்லது தீவிரவாதத்தை சேர்ந்தவர்களோ அல்ல. அமைதியான முறையில் போராட வந்தவர்களை ஏன் இவ்வாறு செய்தார்கள் என்பன போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் ஆர்வர்களிடம் எழுந்து வரும் நிலையில் 12 பேரின் உடலை வாங்க மறுத்தும், இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் முடிவெடுத்துள்ளனர். 12 பேரின் உடலை வாங்க வேண்டும் என்றால், குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு கொடுத்தால் மட்டுமே இந்த 12 பேரின் உடலை வாங்குவோம் என்று போராட்டக்குழு தற்போது முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக என்ன மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கான கூட்டமும் இன்று காலை நடைபெற உள்ளது.

No comments