சிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு!


தமிழ் அரசியல் கைதியான  இராசபல்லவன் தபோரூபன் (வயது 37) அனுராதபுரம் சிறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாக நீடிக்கின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் அவரை சந்தித்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த இராசபல்லவன் தபோரூபன் (வயது 36) என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் உடல்நிலை பாதிக்கப் பட்ட காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மற் றும் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் 2013ஆம் ஆண்டு அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அன்றிலிருந்து அநுராதபுரம் சிறைச் சாலையில் தனி அறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலும் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளார். தான் தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை எனவும், தன்னை ஏனைய கைதிகளுடன் இணைத்து விடுமாறு கோரியும் குறித்த கைதி நீதிபதி, சிறைச்சாலை ஆணையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், அவர் கடந்த நான்கு நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் உள்ளிட்டோர் இன்று அனுராதபுரம் சிறை சென்று தபோரூபளை சந்தித்து உரையாடியிருந்தனர்.

மேலதிக செய்தி இணைப்பு...

அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்.

அனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (13.04.2018) பார்வையிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை அனுராதபுரம் சிறையில் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது இராசவள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.

அரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் கடந்த சில நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

தான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் குறித்த சிறைக் கூடத்துக்குள்ளேயே வாளி ஒன்றினுள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வௌியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



No comments