கொழும்பு கூட்டு சாவகச்சேரியிலும் நீடிக்கின்றதா?கொழும்பை தொடர்ந்து வடக்கிலும் கூட்டமைப்பிற்கும் ஈபிடிபிக்குமிடையேயான உறவு தொடர்கின்றது.கொழும்பில் நேற்று ரணிலை காப்பாற்ற அனைத்து தரப்புக்களும் இணைந்து போட்டியிட்டிருந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ,ஜக்கிய தேசியக்கட்சி மற்றும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.31 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு இன்று (05) வியாழக்கிழமை; உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. 


தவிசாளர் தேர்விற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.


இந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 04 உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக்கட்சியின் 2 உறுப்பினர்களும் வரதராஜப்பெருமாள் அணியின் ஒரு உறுப்பினருமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கந்தையா வாமதேவனிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த வேட்பாளரிற்கு கிடைத்திருந்தது.
இதன்படி கந்தையா வாமதேவன் 23 வாக்குகளை பெற்று தவிசாளராகியுள்ளார்.

No comments