கோரவிபத்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வலர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கலவெல – தம்புள்ளை வீதியில் யடிகல்போத்த என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது தம்புள்ளை மற்றும் கலவெல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments