“சக்தி’ “சிரச” ஊடக தலைமை காரியாலயம் மீது தாக்குதல்!


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் தனியார் ஊடக நிறுவனங்களான சக்தி/சிரச தலைமை காரியாலயத்தை சுற்றி வளைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பெரும்தொகையில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.
பட்டாசு வெடிப்பு சத்தம் காரணமாக சக்தி/சிரச செய்தி பிரிவு மற்றும் தலைமையகம் கதிகலங்கி போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் பிரதமருக்கு எதிராக பல ஆவணக் கதைகளை, செய்திக் குறிப்புகளையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் வௌியிட்டு வந்தது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக பலவிதமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை வௌியிட்டு வந்தது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. தற்போது அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சக்தி/சிரச ஊடகம் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக கருதி சில ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு தமது வெற்றி ஆரவாரத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.

No comments