இராணுவ களியாட்டத்திற்கெதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!


இலங்கை படைகளால் வவுனியாவில் நடத்தப்படவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றை  இன்று நடத்தியுள்ளன.
வவுனியா மாவட்ட செலயகம் மற்றும் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களால் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


தமது பிள்ளைகளை தேடி தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம், வர்த்தகர் சங்கம், பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து புதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


தாம் தமது பிள்ளைகளைத் துதடி ஒரு வருடத்தைக் கடந்தும் போரடிக் கொண்டிருக்கையில் தமது போராட்டத்திற்கு அருகில் இராணுவத்தினரால் களியாட்ட நிகழ்வு நடத்தப்படுவது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தம்மை மேலும் வேதனைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் களியாட்டத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் தம்மையும் தமது தாயாக யோசிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

No comments