அலரி மாளிகையில் மீண்டும் தேனீர்விருந்து!நம்பிக்கையில்லாத்தீர்மானம் தோற்கடிக்கப்படுமென ரணில் முன்னதாகவே நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.


நம்பிக்கையில்லாத்தீர்மானம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு,  ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு 7 மணியளவில் தேநீர் விருந்துபசாரம் வழங்கினார்.


மலையக மற்றும் முஸ்லீம் தலைமைகளுடன் கூட்டமைப்பினரும் தேனீர் விருந்தில் பங்கெடுத்திருந்தனர்.


முன்னைய ஜனாதிபதி மஹிந்த காலத்தில் அரசியல் தலைவர்களுடனான ராஜதந்திர சந்திப்புக்களில் வழங்கப்படும் பிளாக் கோப்பி பிரசித்தனமானது.

அதன் ஊடாக அரசியல் தலைவர்களை மஹிந்த மௌனிக்க வைப்பது வழமையாகும்.

No comments