Header Shelvazug

http://shelvazug.com/

இரணை தீவை விட்டு வெளியேற மாட்டோம் - போராடும் மக்கள்

எமது நிலம் விடு­விக்­கப்­ப­டும் என்ற அர­சி­யல் தலை­வர்­கள், அதி­கா­ரி­க­ளின் வாக்­கு­று­தி­கள் பய­னற்­றுப் போய், போராட்­டங்­கள், ஆர்ப்­பாட்­டங்­கள் செய்­தும் பய­னில்­லாத நிலையில் நாங்­க­ளாக முடி­வெ­டுத்து யாரு­டைய துணை­யும் இன்றி பட­கு­க­ளில் வந்து தங்­கி­யுள்­ளோம்.
இங்கு 26 ஆண்­டு­க­ளின் பின்­னர் சமைத்து உண்­கி­றோம். இனி இந்த இடத்தை விட்டு நக­ரப்­போ­வ­தில்லை என்று கிளி­நொச்சி இரணை தீவு மக்­கள் தெரி­வித்­த­னர்.
கிளி­நொச்சி ‘இரணை தீவு’ மக்­கள் தங்­க­ளைச் சொந்த மண்­ணில்
மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கடந்த திங் கட் கி­ழமை காலை 50 பட­கு­க­ளில் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் இரணைதீவுக்­குச் சென்­ற­னர்.
காலை 10.30 மணிக்கு அங்­குள்ள தேவா­ல­யத்­தில் வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர்.
தொடர்ந்து தமது சொந்த மண்­ணில் மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கோரி ஆர்ப்­பாட்­டம் செய்ய முயற்­சித்­த­னர். எனி­னும் அந்த மக்­க­ளு­டன் பேச்­சில் ஈடு­பட்ட அங்கு நிலை­கொண் டுள்ள கடற்­ப­டை­யி­னர் உரிய அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி உரிய நவ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்­த­னர்.
கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொள்­ளாத மக்­கள் தமது கிரா­மத்­தில் உள்ள கோயி­லுக்கு அரு­கா­மை­யில் போராட்­டத்தை மேற்­கொண்­ட­னர். தீர்வு கிடைக்­காத நிலை­யில் இரணைதீவு கிரா­மத்­தில் தங்கி நின்று போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக அந்த மக்­கள் முடி­வு­ செய்­த­னர்.
மாவட்­டச் செய­லர், மற்­றும் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ர­முள்ள அதி­கா­ரி­கள் தமது போராட்ட இடத்­துக்கு வந்து மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­தாலே அன்றி தாம் அந்த இடத்தை விட்டு நக­ரப் போவ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர். அந்த மக்­க­ளு­டன் பங்­குத் தந்­தை­யர்­க­ளும் இணைந்து கொண்­ட­னர்.
ஒரு சில அர­சி­யல் தலை­வர்­க­ளைத் தவிர எவ­ரும் மக்­க­ளு­டைய கோரிக்­கைக்கு செவி­சாய்க்­கவே இல்லை. இந்த நிலை­யி­லேயே மக்­கள் இரணை தீவை­விட்டு வெளி­யே­றாது அங்­கேயே தங்­கு­வ­தாக முடிவு செய்­துள்­ள­னர்.
‘‘இரணை தீவில் உள்ள ஆல­யத்­துக்கு முன்­பாக மக்­கள் சமைத்து உண்­கின்­ற­னர். பெண் தலை­மைத்­து­வக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே அங்கு அதி­க­மாக தங்­கி­யுள்­ள­னர். அவர்­கள் அங்கு அட்டை, மட்­டித் தொழில்­க­ளில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ள­னர். பாட­சா­லை­கள் ஆரம்­பித்­துள்­ள­தால் மாண­வர்­கள் பாட­சா­லை­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்ற ஒரே கார­ணத்­துக்­காக சிலர் அங்­கி­ருந்து சென்­றுள்­ள­னர். ஏனை­ய­வர்­கள் 26 ஆண்­டு­க­ளின் பின்­னர் இர­ணை­தீ­வில் வாழத் தொடங்­கி­யுள்­ள­னர் இனி இந்த இடத்தை விட்டு எந்­தக் காண­ரம் கொண்­டும் நக­ரப்­போ­வ­தில்லை. எம்மை வந்து சந்­தித்து எமக்­கான பதில்­க­ளைக் கூறாத அதி­கா­ரி­கள் தான் இதற்கு முழுப் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளா­வர். கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற­வேண்­டும். உரிய தரப்­பு­க­ளு­டன் பேசுங்­கள் என்று கடற்­ப­டை­யி­னர் கூறிய பின்­ன­ரும் அவர்­கள் வாயை மூ­டி­யி­ருப்­பது வேதனை தரு­கி­றது’’ என்று போரா­டும் மக்­கள் தெரி­வித்­த­னர்.
கிளி­நொச்சி இரணைதீவு கிராம மக்­கள் 1992ஆம் ஆண்டு தமது சொந்த மண்­ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்­கா­வில் கிரா­மத்­தில் உள்ள ‘இரணை மாதா’ கிரா­மத்­தில் குடி­யே­றி­னர்.
சுமார் 183 குடும்­பங்­கள் கடந்த 26 வரு­டங்­க­ளுக்கு முன் இடம் பெயர்ந்­துள்ள நிலை­யில் தற்­போது 400 குடும்­பங்­க­ளுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்­க­தி­ யான நிலை­யில் முழங்­கா­விலில் உள்ள ‘இரணை மாதா’ கிரா­மத்­தில் வாழ்ந்து வரு­கின்­றன.
தமது சொந்த மண்­ணில் மீள் குடி­யேற்­றம் செய்ய கோரி சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக தமது போராட்­டத்தை தொடர்ந்த மக்கள் கடந்த வரு­டம் தொடர் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர்.
இந்­த­நி­லை­யில் அண்­மை­யில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் இது­தொ­டர்­பாக கூட்­டம் ஒன்­றைக் கூட்டி ஆலோ­சனை செய்­தி­ருந்­தார்.

போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை அவர்­க­ளின் சொந்த இடத்­தில் மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கான ஆரம்­ப­க் கட்ட ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளு மா­றும் அவர் அதி­கா­ரி­க­ளைப் பணித்­தி­ருந்­தார் என்­பது குறிப்­பி டத்­தக்­கது.

No comments