தமிழகத்தில் கடைகள் மூடல்: புதுச்சேரியில் தமிழக பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு


தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் புதுச்சேரியில் தமிழக பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சென்னை உள்பட பல இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. திருச்சி, திருவண்ணாமலை, மதுரை என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் காலை முதலே சாத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தின் பல இடங்களில் பெரும்பாலான பேருந்துகள் ஓடுகின்றன. பேருந்து சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் கோரி புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக புதுச்சேரியில் 4 தமிழக பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மட்டுமில்லாமல் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

No comments