அம்பன் கொலை - சந்தேக நபர் சிக்கினார்!


வடமராட்சி கிழக்கு, அம்பனில் வீடு ஒன்றில் இருந்து மகள் சடலமாகவும், தாயார் படுகாயங்களுடனும் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்த நிலையில் கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments