கரவெட்டி:கூட்டமைப்பிற்கு கைகொடுக்காத முன்னணி!கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்கவேலாயுதம் ஐங்கரன் தெரிவாகியுள்ளார்.சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ச.இராமநாதனை விட ஒருவாக்கு மட்டும் பெற்று மயிரிழையில் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடுநிலமை வகித்திருந்தது.


முன்னதாக வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா எனக்கோரப்பட்ட போது 11 பேர் பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாகவும் 10 பேர் இரகசிய வாக்கெடுப்புக்கும் கோரியிருந்தனர். 10 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பு என தீர்மானிக்கப்பட்டிருந்தது.


இதில் கூட்டமைப்பின் வேட்பாளர் தமது கட்சியுடன் ஜக்கிய தேசியக்கட்சியில் இரு வாக்குகளையும் பெற்று 11 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஈபிடிபியின் மூன்று உறுப்பினர்கள் சகிதம் 10 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.


இதன் பிரகாரம் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கவேலாயுதம் ஐங்கரன் தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.


31 உறுப்பினர்களைக்கொண்ட கரவெட்டிப் பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி 7 ஆசனங்களையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி 7 ஆசனங்களையும் , ஈபிடிபி 3 ஆசனங்களையும் , ஐ.தே.கட்சி 2 ஆசனங்களையும் , தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் பெற்றிருந்தமை தெரிந்ததே.

No comments