தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அமொிக்கத் தமிழர்கள் ஆதரவு!தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தொிவித்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை ஸ்டெர்லைட் அமெரிக்காவில் உள்ள சார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா மற்றும் கனடா தமிழர்கள் நேற்று அமைதி பேரணி நடத்தினர். நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கடந்த வாரம் லண்டனில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க வந்தனர். எனினும் அவர்களது மனுவை அதிகாரிகள் வாங்காததால் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.


No comments