ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்


ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே, ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை வழங்கினார்.26 ஆண்டுகள் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏ.எல்.ஏ.அசீஸ், இதற்கு முன்னர், வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.

No comments