வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா எல்லையில்! மாநாடு தொடங்கியது!

1953 ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் இராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜோங் உன்.

இந்த உச்சிமாநாட்டின் நேரலையை தென் கொரிய சிறைவாசிகளும் பார்த்தனர். அந்நாட்டு நேரப்படி காலை 9.30 மணியிலிருந்து அரை மணி நேரத்திற்கு பல சிறைகளில் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சீனா, வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளி நாடாக இருந்து வருகிறது. பதிவியேற்றதிலிருந்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார் கிம்.

கிம் மற்றும் மூன்னின் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அமெரிக்காவின் சிஐஏ தலைவராகவும், தற்போது வெளியுறவுச் செயலராகவும் இருக்கும் மைக் போம்பேயோ மற்றும் ஜனாதிபதி கிம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் சந்தித்து கைக்குலுக்கிய புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி மூன்னுடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய ஜனாதிபதி கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய ஜனாதிபதி மூன் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் வட கொரியாவின் சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்ய முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தென் கொரியா தெரிவித்திருந்தது.

2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உச்சி மாநாடுகளுக்கு பிறகு, இரு நாட்டு உறவும் சமீப மாதங்களில் மேம்பட்டு வருவதே தற்போது நடைபெறும் இந்த சந்திப்புக்கு காரணமாகும்.

நிகழ்ச்சி நிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள வட கொரிய அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு இந்த சந்திப்பு ஒரு முன்னோட்டம் என்றும் கூறப்படுகிறது.

No comments