பேரங்கள் படிந்தன! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று(04) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

விவாதத்தின் இறுதியில் இன்றிரவு 9.30 மணிக்கு வாக்களிப்பு இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திடாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்கெடுப்பில் கலந்துகொண்டு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

ஊழல்களில் ஈடுபட்டோரை காப்பாற்றிவரும் தேசிய அரசாங்கமான நல்லாட்சி அரசு பணப் பேரங்களினாலும், பதவிகளை இழக்க நோிடும் என்பதாலும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments