ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நேர்ந்துள்ள கதி


சில ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கையளித்ததன் பின்னர் அது மூடி மறைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கலைத்துறை குறித்து தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகள் 3 ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

அந்தநிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய தொலைக்காட்சி தொடர்பான அறிக்கை, தேசிய சினிமாவை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கை மற்றும் பாடல்கள், இசையமைப்பு, பாடகர்கள் தொடர்பான அறிவுசார் சொத்துடமை குறித்த அறிக்கைகள் இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன

No comments