வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் மீது தாக்குதல்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்ட களத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டதாக எவரையும் கைது செய்யவில்லையென இலங்கை காவல்துறை இன்றிரவு அறிவித்துள்ளது.

முல்லைதீவ மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் அங்கு மக்கள் போராடி வரும் நிலையில் அங்கு சென்ற மர்ம நபரொருவர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்க முற்பட்ட போதும் உறவுகள் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.

ஆயினும் அங்கிருந்த கதிரை மற்றும் அங்கு சமையல் செய்யும் உபகரணங்கள் மீது கத்தியால் வெட்டியதோடு தப்பித்து செல்ல முற்பட்டுள்ளார்.

இந்நிலையினில் அவரை பிடிக்க போராட்டகாரர்கள் முற்பட்டதுடன் அருகில் வீதிப்பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறையினரது உதவியால் அந்நபரை கைது செய்யமுற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றிரவு கொழும்பு ஊடகமொன்று முல்லைதீவு காவல்துறையுடன் தொடர்புகொண்ட போது அவ்வாறு எவரையும் கைது செய்யவில்லையென அறிவித்துள்ளது.

 

No comments