காவிரி விவகாரம்.. ஐபிஎல் சர்ச்சை.. என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்


சென்னைக்கு வரும் உணர்வே வேறு மாதிரி இருக்கிறது என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் போராடிவருகின்றனர்.
காவிரிக்காக தமிழர்கள் போராட்ட களத்தில் ஒன்றிணைந்துள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்துள்ளன.
சீமான், வேல்முருகன் உள்ளிட்டோரும் பாரதிராஜா, சத்யராஜ், அமீர், தங்கர்பச்சன், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட திரைத்துறையினரும் சென்னையில ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்ப்புகளை மீறி இன்றைய போட்டி நடந்தால், மைதானத்தை முற்றுகையிடுவோம் என வேல்முருகன் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.
மேலும் வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதேனும் நேரிட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என வேல்முருகன் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் கிரிக்கெட் வீரர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா அணி நேற்று சென்னை வந்தது. வீரர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வீரரும் கொல்கத்தா அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக், சென்னை வரும் உணர்வே வித்தியாசமாக இருக்கிறது. என்னை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என டுவீட் செய்துள்ளார்

No comments