சீனாவின் பழுதடைந்த விண்வெளி ஆய்வு நிலையம் இன்று பூமியில் விழுகிறது!

சீனா கடந்த 2011-ம் ஆண்டு விண்ணில் செலுத்திய டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த 2016-ம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

இதைத் தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் என ஆராய்ச்சியாளர்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தனர்.
சுமார் 8,500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும்போது, விண்கல் மோதிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும், அதில் நிரப்பட்டுள்ள எண்ணெய் போன்ற ஹைட்ரஜன் வாயுவை மனிதர்கள் சுவாசித்தால், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே விண்வெளியில் சுமார் 179 கிலோமீட்டர் தூரத்தில் கீழ்நோக்கி இறங்கி கொண்டிருக்கு, இந்த ஆய்வு நிலையம் இன்று காலை 7.25 மணியளவில் பூமியின் புவி ஈர்ப்பு விசை சக்திக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைகிறது.

இதையடுத்து, அமெரிக்கா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் நாளை பூமியில் மோதுகிறது. அநேகமாக, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் தெற்கு பகுதி அல்லது வடக்கு கலிபோர்னியாவில் இருந்து பென்சில்வேனியாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த பழுதடைந்த ஆய்வு நிலையம் கீழே விழலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


No comments