ஈரானில் நிலநடுக்கம்! 54 பேர் காயம்!

ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது. டெஹ்ரானில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஈரானின் மேற்கு பகுதியில் ரிக்டரில் 5.3 என்ற அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினர். இதில் சுமார் 54 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

No comments