பிரான்சில் இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத் தேர்வு 2018 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!


தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.அகிலன், திரு.மகிந்தன் ஆகியோர் தேர்வுதொடர்பான அறிவுறுத்தல்களை சிறப்பாக வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து தேர்வுகளில் பங்குபற்றுவோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் பிரித்தானியாவில் இருந்து வருகைதந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பாலசிங்கம் சுகுமார் அவர்களும் இசையமைப்பாளர் மற்றும் ஈழத் திரைப்பட இயக்குநர் நிர்மலன் நடராஜா அவர்களும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர்.
புலம்பெயர் தேசத்தில் தமிழ் வளர்க்கப்படும் பணி உன்தமானது எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்பதாகவும் அவர்களின் உரை அமைந்திருந்தது.

இம்முறை பிரான்சில் Île De France - மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளதுடன், வரும் 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களிலும் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற ஏற்பாடகியுள்ளதாகவும்
தமிழ்மொழி பொதுத் தேர்வு வரும் 02.06.2018 சனிக்கிழமை LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER - B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment