பிரான்சில் நடைபெற்ற இசை வேள்வி 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்திய இசைவேள்வி 2018.

வாய்ப்பாட்டு , வயலின், மிருதங்கம்,  போன்ற கர்நாடக சங்கீத மற்றும் லய வாத்தியங்களைப் பயிலும் இளையோர்களின் இசைத் திறமைகளை வெளிக் கொணர நடாததப்படும் இசைவேள்வி 2018 நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமினிலில் கடந்த சனி (31.03.2018), நேற்று ஞாயிறு (01.04.2018) ஆகிய இருதினங்கள் இடம் பெற்றன.

முதல்நாள் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக முல்லைத்தீவில் 02.09.1990  இல்  சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஆப்தீன் அவர்களின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது.   புளோமினில் துணை நகரபிதா Mme Christine Cerrigone  விளக்கேற்றிவைத்தார்.

நடுவர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு கட்சன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

முதல் நாள் நிகழ்வின் நடுவர்களாக இசைக் கலைமாமணி (யாழ் நுண்கலைப் பீடம் ) வயலின்ஆசிரியை  திருமதி நவமாலசேகரி சக்திவடிவேல், நுண்கலைமாமணி (யாழ் நுண்கலைப்பீடம்) , கலாவித்தகர் (வட இலங்கை சங்கீதசபை) திருமதி தர்மிகா முரளிதரன் B.A ,  குரலிசை  ஆசிரியை (கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) திருமதி டிலோஜினி , இவர்களுடன் பிரதம நடுவராக மிருதங்க கலைமாமணி (யாழ் நுண்கலைப் பீடம்) கார்த்திகேசு விவேகானந்தன் B.A பணியாற்றினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக 1990 ஆம் ஆண்டு அரியாலைப் பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கணேஸ் அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து விளக்கேற்றல் வைபவம் இடம் பெற்றது.  விளக்கினை புளோமினில் துணை நகரபிதா Mme Christine Cerrigone  விளக்கேற்றிவைத்தார்.

நடுவர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு கட்சன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இரண்டாம் நாள் நிகழ்வின் நடுவர்களாக இசைக் கலைமாமணி (யாழ் நுண்கலைப் பீடம் ) வயலின்ஆசிரியை  திருமதி நவமாலசேகரி , திருமதி தர்மிகா முரளிதரன் B.A ,  இவர்களுடன் பிரதம நடுவராக மிருதங்க கலைமாமணி (யாழ் நுண்கலைப் பீடம்) கார்த்திகேசு விவேகானந்தன் B.A பணியாற்றினர்.

இரண்டாம் நாள்  நிகழ்வின் போது புளோமினில் நகரபிதா M. Thierry Meignen அவர்கள் மண்டபத்தில் இருந்து நிகழ்வுகளை பார்வையிட்டதுடன் உரையாற்றி இருந்தார்.கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளரின் நன்றியுரையினைத் தொடர்ந்து நடுவர்கள் மதிப்பளிக்கப் பட்டனர்.

பிரான்சில் இசைத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்  என்ற படலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் !
இசைத்துளிர் 2018
எட்வேட் லூயிஸ் அனோஜினி

குரலிசை கீழ் பிரிவு
1 ஆம் இடம் முரளிதரன் கபிசன்
2 ஆம் இடம் சுரேஷ்;குமார் தமிழினி
3 ஆம் இடம் சிறீதரன் அக்ஷரா

குரலிசை மத்திய பிரிவு
1 ஆம் இடம் கணபதிப்பிள்ளை கார்த்தி
2 ஆம் இடம் ஜீவராஜா பிரத்யங்கிரா
3 ஆம் இடம்முகுந்தன் பிறாஜன்
3 ஆம் இடம் சுரேஷ்;குமார் சங்கீதன்

குரலிசை மேல் பிரிவு

1 ஆம் இடம் சிறீதரன் ஆரவி
2 ஆம் இடம் சிறீசுதேஸ்கரன் வருஷினி
3 ஆம் இடம் தெய்வேந்திரம் ஹரிஹரணி
3 ஆம் இடம் சுரேஷ்குமார் சாகித்தியன்

குரலிசை அதி மேல் பிரிவு

1 ஆம் இடம் சிவானந்தராஜா ராம்
2 ஆம் இடம் மார்ரின் அசாந்தி
3 ஆம் இடம் பிரசன்னா நிதுசா
3 ஆம் இடம் : புஸ்;பகரன் அட்ஷயா

குரலிசை அதி அதி மேல் பிரிவு

1 ஆம் இடம் : திலீப்குமார் திசானிகா
2 ஆம் இடம் : பாலசுப்பிரமணியம் கஜானி
3 ஆம் இடம் : கெங்காதரன் மதுமிதா

குரலிசை குழு கீழ் பிரிவு
1 ஆம் இடம் : இசைக்கதம்பம் - இ
2 ஆம் இடம் : இசைக்கதம்பம் - அ
3 ஆம் இடம் : நுவசி லு குரோன் தமிழ்ச் சோலை
3 ஆம் இடம் : சோதியா கலைக்கல்லூரி

குரலிசை மேற் பிரிவு
1 ஆம் இடம் : இசைக் கதம்பம்
2 ஆம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
3 ஆம் இடம் : சாகித்தியாலயம் இசைப்பள்ளி

வயலின் கீழ் பிரிவு
1 ஆம் இடம்சசிகரன் சௌமிகா

வயலின் மத்திய பிரிவு
1 ஆம் இடம் ராம்குமார் ராகரன்
2 ஆம் இடம் மகிந்தன் மகிஷா
3 ஆம் இடம் துரைசிங்கம் வைஷ்ணவி

வயலின் மேல்பிரிவு
1 ஆம் இடம் சிவானந்தராஜா குந்தவி
2 ஆம் இடம் அகிலன் அஷ்;வின்
3 ஆம் இடம் மாயூரன் காருண்யா

வயலி அதி மேல் பிரிவு
1 ஆம் இடம் : சிவானந்தராஜா ஆரபி
2 ஆம் இடம் : சின்னத்தம்பி வைதிகா
2 ஆம் இடம் : தேவன் அசிதன்
3 ஆம் இடம் : மயில்வாகனம் அபிராமி
3 ஆம் இடம் : பகிரதன் பிரகாஷ்

வயலின் அதிஅதி மேற்பிரிவு
1 ஆம் இடம் : குணரட்ணம் சங்கவி

வயலின் குழு கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி

வயலின் குழு மேல்பிரிவு
1 ஆம் இடம்: சோதியா கலைக்கல்லூரி - ஆ
2ஆம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி
3 ஆம் இடம் : லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை - ஆ

மிருதங்கம் மத்திய பிரிவு
1 ஆம் இடம் : கணபதிப்பிள்ளை கார்த்தி

மிருதங்கம் மேல் பிரிவு
1 ஆம் இடம் : கணேசலிங்கம் துவாரகன்
2 ஆம் இடம் : குமணன் மிதுரன்
3 ஆம் இடம் : மகேந்திரம் பகிர்தன்

மிருதங்கம் அதி மேற்பிரிவு
1 ஆம் இடம் : புஸ்பகரன் அபினாஸ்
2 ஆம இடம் : முகுந்தகுமார் மிதுலன்
3 ஆம் இடம் : பகிரதன் ஆகாஷ்

























No comments