அமெரிக்காவில் ''எச்1பி'' நுழைவிசை இனிமேல் கிடையாது!

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் (2015-ம் ஆண்டு) ‘எச்-1’ பி நுழைவிசைவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) ‘எச்-4’ நுழைவிசை அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

இதன் காரணமாக ‘எச்-1’ பி நுழைவிசைவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு (வேலைக்கான அனுமதி) கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வரமாக அமைந்தது.

ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள் அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்” என்ற கொள்கையை அறிவித்து தீவிரமாக பின்பற்றி வருகிறது.

இந்த நிலையில், ஒபாமா காலத்தில் ‘எச்-1’ பி நுழைவிசைதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘வேர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments