ரணிலை ஆதரிக்க கூட்டமைப்பு முன்வைத்துள்ள 10 நிபந்தனைகள்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது. தமிழ் மக்­க­ளின் நீண்டகால அவ­ல­மும் உட­ன­டித் தேவை­க­ளா­க­வும் உள்ள 10 விட­யங்­களை எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­தல் அறி­விப்­பிற்கு முன்­னர் நிறை­வேற்றி வழங்­கு­வ­தாக எழுத்­தில் உறு­தி­ய­ளித்­தால், நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்தை எதிர்க்­க­லாம் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூறியுள்ளது. நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வேண்­டிய நிலைப்­பாடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டம் எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில்­ கூ­டி­யது. நீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளு­டன் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தின் இறு­தி­யில் ரணி­லு­டன் பேரம் பேசு­வது என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது. அதற்­க­மைய 10 கோரிக்­கை­கள் அடங்­கிய நிபந்­த­னைப் பட்­டி­யல் ஒன்­றும் தயா­ரிக்­கப்­பட்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது. அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள கோரிக்­கை­க­ளா­வன, புதிய அர­ச­மைப்பு முயற்­சியை எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்­பா­கப் பூர்த்­தி­செய்து நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அதனை நிறை­வேற்­று­தல். வடக்கு கிழக்­கில் தமிழ் மக்­கள் பிர­தே­சத்­தில் படை­கள் வசம் தொடர்ந்தும் உள்ள நிலப்­ப­ரப்­புக்­களை விடு­வித்­தல். இதே­கா­லத்­தில் சிறை­யில் வாடும்­அ­ர­சி­யல் கைதி­களை மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்­தல். காணா­மல்­போ­னோ­ரின் உற­வு­கள் கடந்த ஓராண்­டாக வீதி­யில் உள்ள நிலை­யில் காணா­மல்­போ­னோர் செய­ல­கம் என்ற ஒன்­றைத் தவிர வேறு எந்த உருப்­ப­டி­யான முன்­னேற்­ற­மும் இல்­லா­த­மை­யி­னால் அதற்­கான பொறுப்­புக்­கூ­ற­லு­டன் உரிய தீர்­வி­னைக் கூறு­தல். வடக்கு கிழக்­குப் பகு­தி­க­ளில் தொழில் முயற்சி என்­னும் பெய­ரில் குடி­யேற்ற முயற்­சி­யோடு அந்­தப் பகுதி மக்­க­ளின் உரிமை மறுக்­கப்­ப­டு­வது தொடர்­பில் நீண்­ட­கா­ல­மா­கச் சுட்­டிக்­காட்­டும் விட­யத்­திற்கு உரிய தீர்வு வழங்­கு­தல். வடக்கு கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர், யுவ­தி­கள் வேலை வாய்ப்­பின்­றி­யுள்ள நிலை­யில் சிறப்பாகவேலை­வாய்ப்பு வழங்கி அதற்­கான தீர்வை வழங்­கு­வ­தோடு வடக்கு கிழக்கு பகு­திக்­குத் தெற்­கில் இருந்து நிய­ம­னம் வழங்­கு­வ­தனை நிறுத்­து­தல். வடக்கு கிழக்கு மாகா­ணத்­தின் 8 மாவட்­டங்­க­ளிற்­கும் தமிழ் அரச அதி­பரை நிய­மித்­தல். வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளில் திட்­டங்­கள் அபி­வி­ருத்­தி­க­ளின்­போது மாகாண அர­சின் கொள்­கை­கள் திட்­டங்­க­ளிற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தோடு திட்­டத் ­த­யா­ரிப்­பின்­போதே மாகாண சபை­யின் கருத்­தைப் பெறு­தல். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 13 பேரும் நேற்­றுச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவ­ரி­டம் இந்­தக் கோரிக்­கை­கள் அடங்­கிய கடி­தம் கொடுக்­கப்­பட்­டது. இதற்கு அவர் எழுத்து மூலம் வழங்­கும் பதி­லைப் பொறுத்து இன்று கூட்­ட­மைப்­பின் முடிவு தெரி­யும் என்று கூறப்­பட்­டது.

No comments