புளொட் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகின்றதா?

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தவிசாளர் தெரிவிற்கு பங்காளிகளான தமிழரசுக் கட்சியும் புளொட்டும் முட்டிமோதியது போல தமிழரசுக் கட்சியே
இருவரது பெயரைப் பிரேரித்ததால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களாகளான புளொட்டும் தமிழரசும் தவிசாளர் தெரிவில் எதிரெதிர் நின்று போட்டியிட்ட நிலையில் புளொட் அமைப்பின் க.தர்சன் வெற்றிபேற்றிருந்தார்.


இந்நிலையில் உப தவிசாளருக்கான பெயர்களைப் பிரேரிக்குமாறு கோரப்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பிரகாசைப் பிரேரித்தார். பிரகாசும் சம்மதம் தெரிவிக்க ஈபிடிபியைச் சேர்ந்த காயத்திரி பிரகாசின் தெரிவினை வழிமொழிந்தார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுமந்திரக் கட்சியைச் சேர்ந்த த.துவாரகன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பா.சுரேஸ்குமார் ஆகியோரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. இதனையடுத்து திடீரென எழுந்த ஒருவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இ.பரமேஸ்வரன் என்பவரது பெயரினையும் பிரேரித்தார். இதனால் தமிழரசுக் கட்சியிலிருந்து இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

உப தவிசாளருக்கும் 04 பெயர்கள் பிரேரிக்கப்பட்ட நிலையில் ஒரே கட்சிக்குள் இருவர் என போட்டி வந்தபோது சுதாகரித்துக் கொண்ட பிரகாஸ் திடீரென எழுந்து தான் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து போட்டி மூவருக்கானது.
இதனையடுத்து பகிரங்க வாக்கெடுப்பிற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துவாரகன் 06 வாக்குகளையும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரலிங்கம் 15 வாக்குகளையும் பெற்றனர். ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் வாக்கு எதனையும் பெற்றிருக்கவில்லை. இதன் மூலம் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரலிங்கம் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 பேருமாக 09 உறுப்பினர்கள் உப தவிசாளருக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்தனர்.

No comments