இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த எஸ்.ஜெய்சங்கர், ஓய்வுபெற்றதை அடுத்து, அண்மையில் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோகலே நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், விஜய் கோகலே சிறிலங்காவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை விரைவில் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் பங்களாதேசுக்கும் அவர் விரைவில் பயணம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன.

No comments