வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டப்ளின்-ரோம் விமானம் பிரான்சுக்குத் திருப்பி விடப்பட்டது
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டப்ளினிலிருந்து ரோம் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்றுஇன்று வியாழக்கிழமை பிரான்சுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், அங்கு அதற்கு இராணுவ விமானங்கள் பாதுகாப்பு அளித்ததாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் செவ்வாயன்று சுமார் 10 ஐரோப்பிய விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக வார்சா விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டதாகவும், ரோமில் உள்ள விமானப்படை விமானங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃப்ளைட் ரேடார் கண்காணிப்பு வலைத்தளத்தின்படி, திசை திருப்பப்பட்ட அந்த விமானம் ஏர் லிங்கஸ் விமானக் குழுமத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.
அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்தவுடனேயே விமானங்களை அனுப்பியதாக பிரான்சின் விமானப்படை தெரிவித்துள்ளது.
அந்த விமானம் திசை திருப்பப்பட்டு, பாரிஸின் மேற்கே உள்ள எவ்ரே விமான நிலையத்திற்குப் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என்று அது மேலும் கூறியது.

Post a Comment