பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியாவில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வுகள் லண்டன்

எக்‌ஷல் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரித்தானியா மாவீரர் நாளில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பிராந்திய நீண்டகால செயற்பாட்டாளர் திரு சதாசிவம் ஆனந்தகுமார் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

பிரித்தானிய தேசியக்கொடியினை தமிழ் இளையோர் பொறுப்பாளர் செல்வி டென்சியா நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் துனைப் பொறுப்பாளரும் அனைத்துலக தொடர்பகத்தின் மகளிர் அணி பொறுப்பளரும் முன்னால் சிறுத்தை படையணியின் தளபதியுமான திருமதி ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

No comments