உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள், இன்று (நவம்பர் 27)
அந்த வகையில், உடுத்துறை பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றன.
இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.






Post a Comment