டிரம்ப் முன்மொழிந்த வெற்றி வளைவுக்குக் கூட்டாட்சி நீதிமன்றம் இரண்டு வாரத் தடை


வாஷிங்டனில் டிரம்ப் முன்மொழிந்த 250 அடி வெற்றி வளைவுக்குக் கூட்டாட்சி நீதிமன்றம் இரண்டு வாரத் தடை

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 250 அடி உயர வெற்றி நினைவு வளைவின் கட்டுமானப் பணிகளுக்கு அமெரிக்கக் கூட்டாட்சி நீதிபதி தன்யா சுட்கன் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு தேசிய தலைநகர திட்டமிடல் ஆணையம் 8-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்த மறுநாளே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டில் அந்த இடத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்குக் காங்கிரஸ் அனுமதி வழங்கியிருந்தாலும், தற்போதைய 250 அடி உயர வளைவைக் கட்டுவதற்கு அந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறதா என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், திங்கட்கிழமைக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments