மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று வெள்ளிக்கிழமை (27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை (27) மாலை 6.5 மணியளவில் இரண்டு மாவீரர்களின் தந்தையால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.





Post a Comment